உண்மையான பௌத்தர்களாகிய நாம் இத்தருணத்தில் மியன்மார் மற்றும் தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம்

உண்மையான பௌத்தர்களாகிய நாம் இத்தருணத்தில் மியன்மார் மற்றும் தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம்

மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது கடமைகளை உயரிய பட்சத்தில் நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வாக்றுதியளித்ததார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பிலுள்ள மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு விஜயம் செய்து இந்த அனர்த்தம் தொடர்பாக தனது வருத்தத்தையும் கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்ததன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டு சம்புத்த சாசன முறையோடும் பௌத்த நாகரிகத்தோடும் மியான்மருக்கு மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதால், பொறுப்புள்ள பௌத்தர்களாக மதத்தின் பிரகாரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமான நிவாரணத்தையும் முடியுமான ஒத்துழைப்புகளையும் பெற்றுத் தருவேன்.

மியன்மார் மக்களுக்கு இயன்ற உட்சபட்ச நிவாரணங்களையும், உதவுகளையும் வழங்குமாறு செல்வந்த நாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )