நவம்பர் 15க்குள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் அறிமுகம்

நவம்பர் 15க்குள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் அறிமுகம்

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்குள் புதிய வடிவில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ,புதிய வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போது சந்தையில் இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்கள் ஏராளமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

வர்த்தக நிறுவனங்களின் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக மோட்டார் வாகனத் துறை சுமார் 10 ஆண்டுகளாக முன்னேற்றமின்றி இருப்பதாக அவர் கூறினார்.

புதிய ஓட்டுநர் உரிமம் தயாரிக்கப்பட்டும் எனவும் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு எதிர்வரும் வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )