
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூட கழிப்பறையில் ஒருவர் தற்கொலை
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூட கழிப்பறைக்குச் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் அவர் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நபர் நேற்று விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு திறந்த நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டு ,திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்போது, குறித்த நபர் சிறை கழிப்பறைக்குச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை செய்துக்கொண்டவர் இரு பிள்ளைகளின் தந்தையான வாச்சுக்குட்டி நெவ்பர் எனவும் இவருக்கு எதிராக இரண்டு திருட்டு மற்றும் நான்கு போதைப்பொருள் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

