
செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் வரி செலுத்தி தாமத அபராத கட்டணங்களை தவித்துக்கொள்ளுங்கள் அனைத்து வரி செலுத்துவோருக்கும் அறிவிப்பு
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வர கட்டணங்களை செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், பங்குடைமை மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வரி செலுத்தும் சீட்டுகள் கிடைக்கும்வரை காத்திருக்காமல், இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் ஒன்லைன் வரி செலுத்தும் (OTPP) மூலம் நிலுவைத் தொகையை செலுத்த முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
தாமதங்கள் அல்லது செலுத்தவறியவைகளுக்கு வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும், நேரடி கட்டண சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது .
வரி செலுத்தாதது அல்லது தாமதமாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி ஒருபோதும் தள்ளுபடி செய்யப்படமாட்டாது எனவும் குறைக்கப்படாது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

