
குத்துச்சண்டை வீரரின் மரணத்தைத் தொடர்ந்து கானாவில் குத்துச் சண்டைக்குத் தடை
கானாவில் குத்துச்சண்டை வீரரின் மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து குத்துச்சண்டை நடவடிக்கைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
32 வயதான பாகுபலி என்று பிரபலமாக அறியப்படும் எர்னஸ்ட் அகுசே (Ernest ‘Bahubali’ Akushey)குத்துச்சண்டையில் உயிரிழந்ததையடுத்து ,அந்நாட்டின் தேசிய விளையாட்டு ஆணையம், இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் கடைசியாக கலந்துகொண்ட போட்டியின் போது ஏற்பட்ட உள் காயங்கள் காரணமாக போட்டி நடைபெற்று 11 நாட்களுக்குப் பிறகு எர்னஸ்ட் அகுசே உரியிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன.
உயிர்களைப் பாதுகாக்கவும், விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், அதன் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய விளையாட்டு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குத்துச்சண்டையில் கானாவில் ஆறு மாதங்களுக்குள் இரண்டு தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மார்ச் மாதத்தில், நைஜீரிய குத்துச்சண்டை வீரர் கேப்ரியல் ஓலுவாசெகுன் ஓலான்ரேவாஜு (Gabriel Oluwasegun Olanrewaju) ஒரு போட்டியின்போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

