ரம்புக்கனையில் ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு

ரம்புக்கனையில் ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்த சிறுவன் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் ரயிலில் தனது நண்பர்களுடன் திஸ்மல்பொல ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கு ரயிலில் இருந்து இறங்கியபோது, ​​ரயில் நடைமேடையில் கால்வைக்காது , ரயில் பாதையில் கால் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ,பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ரம்புக்கனை போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )