வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்கில் உலா கான்சு மாகாணத்தில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கான்சு மாகாணத்தில் லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர். 

எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சேதங்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )