அதிகளவான தோட்டாக்களுடன் ஒருவர் கைது

அதிகளவான தோட்டாக்களுடன் ஒருவர் கைது

கொட்டாவை பகுதியில் 458 தோட்டாக்கள் மற்றும் T-56 கோப்புடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின், 30 போலி வாகன இலக்கத்தகடுகள், 15 வாகன வருமான உத்தரவு பத்திரங்கள், 15 காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )