பிலிப்பைன்சை தாக்கிய புவலாய் புயல் ; 20 பேர் பலி

பிலிப்பைன்சை தாக்கிய புவலாய் புயல் ; 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளதுடன் 20 பேர் பவியாகியுள்ளனர்.

இந்நிலையில், வியட்நாம் நோக்கி புவலாய் புயல் நகர்ந்து உள்ளதால் , வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )