யாழ். பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு!

யாழ். பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றையதினம் மதியம் 1:30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் இது வரைக்கும் தெரியவரவில்லை. தற்செயலாக ஏற்பட்டதா? இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா? என மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.

தம்பித்துரை பிரதீபன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )