
2000 ரூபாயாக உயர்ந்த தேசிக்காய் விலை!
தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1800ரூபாய் முதல் 2000ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எலுமிச்சம் பழத்தின் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை 30ரூபாய் முதல் 60ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 230ரூபாய், ஒரு கிலோ பீட்ரூட் 50ரூபாய் முதல் 60 ரூபாய் வரை, ஒரு கிலோ தக்காளி 110ரூபாய், ஒரு கிலோ வெண்டைக்காய் 160ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

