கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

நவகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய பின்னர், திடீரென வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றுப் பக்கம் சென்றுள்ளார். 

இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )