
புதிய நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கலாநிதி பொறியியலாளர் கே. வெலிகேபொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அதற்கமைய, வெற்றிடமாகும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றுகின்ற இலங்கை பொறியியல் சேவையின் விசேடதர சிவில் 03 ஆம் வகுதியின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி (பொறியியலாளர்) கே. வெலிகேபொலகேவை 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
CATEGORIES Sri Lanka

