
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
ஆனமடுவ, சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று (02) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரனின் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது காட்டு யானை தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

