
மாங்குளத்தில் 25 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது
மாங்குளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோ பீடி இலைகள் கொண்ட 40 பொதிகளுடன் சந்தேகநபர்கள் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 21, 28, 40 மற்றும் 43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
CATEGORIES Sri Lanka

