
”போதைப்பொருள் வலையமைப்பு தகவல்களை வெளிப்படுத்தியதால் கஜ்ஜாவைக் கொலை செய்தேன் ” – பெக்கோ சமன் வாக்குமூலம்,
தமது போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியதால் தாம் கஜ்ஜாவைக் கொலை செய்ததாக பெக்கோ சமன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
மேலும் தம் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் அருண விதான கமகே என்ற கஜ்ஜா கொலைசெய்யப்பட்டதன் பின்னர் ,கஜ்ஜாவின் மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்றரை லட்சம் ரூபாயை தான் வைப்பில்லிட்டதாகவும் பெக்கோ சமன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை கஜ்ஜாவின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யும் எண்ணம் தமக்கு இருக்கவில்லை என்றும் பெக்கோ சமன் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ,பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் கொலை ஒன்றிக்காக தான் துப்பாக்கிகளை வழங்கியதாகவும், ஆனால் அவை கஜ்ஜாவைக் கொல்வதற்காகவே வழங்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்றும் சம்பத் மனம்பேரி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கிய இந்த வாக்குமூலங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் சம்பத் மனம்பேரியின் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது .
கஜ்ஜா கொலையில் இதுவரை எந்த அரசியல்வாதியும் ஈடுபட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

