ஓட்டமாவடியில் கார் விபத்து ; ஒருவர் பலி

ஓட்டமாவடியில் கார் விபத்து ; ஒருவர் பலி

ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிழந்தவர் ஓட்டமாவடி – 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )