
தபால் ஊழியர்களுக்கு கைரேகை முறை அறிமுகம்
கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
பல தபால் தொழிற்சங்கங்கள் சமீபத்தில் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்களை நிறுவுவதை எதிர்த்தும், அதனுடன் தொடர்புடைய பிற குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

