
நில அளவை பட்டதாரியை அங்கீகரிக்கப்பட்ட நிபுணராக மாற்றுவதற்கான நடைமுறை திட்டம்
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் நில அளவை பட்டதாரிகளை, நில அளவை சபையில் பதிவுசெய்யப்பட்ட நிபுணர்களாகவும் அரச சேவையில் இணைவதற்குமான நடைமுறையை முறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று (07)பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதிஅமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நில அளவை துறையில் பட்டம் பெறுகிறார்கள், மேலும் பட்டதாரிகள் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களாக மாறுவதற்கு நில அளவைத் திணைக்களத்தின் கீழ் மூன்று வருடகால நடைமுறைப் பயிற்சியை முடிப்பதே தற்போதைய நடைமுறை.
பல ஆண்டுகளாக இந்தப் பயிற்சிக்கு முறையான ஆட்சேர்ப்பு இல்லாதது மற்றும் பயிற்சியின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக உடனடி தலையீடுகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களம் ஒப்புக்கொண்டது.

