
இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கைது
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் இன்று (08) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் முன்னதாக இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ள நிலையில், அதன்போது ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடுகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

