மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.

அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணியிலும் அதிரடி சூரர்கள் நிறைந்து இருப்பதால், ரன் விருந்தையும் எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து 13 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் கால்சதத்தை எட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )