
மாத்தறை மாவட்டத்தின் 67 பயனாளிக் குடும்பங்களுக்காக புதிய வீடுகள் அன்பளிப்பு
ஒக்டோபர் 5ம் திகதி உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைத்தினால் மேற்கொள்ளப்படும் “தமது இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு மாத்தறை மாவட்டத்தின் வீடற்ற “67 குடும்பங்களுக்காக புதிய வீடுகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
அதன்படி மாத்தறை மாவட்டம் முழுவதும் 188 வீடுகளை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 133 வீடுகளில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டிட வேலைகள் நிறைவற்ற 67 வீடுகள் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பாஸ்கொட, முலட்டியன, ஹக்மண மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகளை பகிர்ந்த அளிக்கும் நிகழ்வு மகா சங்கத்தினர், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே உட்பட பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

