
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் ஈட்டப்படுள்ளது
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் (வரிக்குப் பின்னரான இலாபம்) ஈட்டப்படுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 08 மாத காலப்பகுதியில் 18.ஈட்டப்படுள்ள தேறிய இலாபம். 2024 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ம் ஆண்டில் தேறிய இலாபம் 13 பில்லியன் வரை அதிகரித்துள்ளது. அது 71%வீத அதிகரிப்பாகும்.
2025 ம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் மதிப்பிடப்பட்ட இலாபம் 21 பில்லியன் என்பதுடன் மதிப்பிடப்பட்ட இலக்கைத் தாண்டியது.
தொடர் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வினைத்திறனாக மேற்கொள்வதன் இலாபமாக கொள்கலன்களைக் கையாளுதல் 2024 முதல் 08 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 6% வரை அதிகரித்துள்ளதுடன் கிழக்கு இறங்கு துறை மற்றும் ஜயா இறங்கு துறை போன்றவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவுற்றதும் எதிர்காலத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறங்கு துறை சேவை ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல், திறன் அதிகரிப்பு மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகியவற்றின் காரணமாக வருவாய் அதிகரிப்பு எதிர்பார்த்த இலக்குகளை விட அதிகமான இலாபத்தை அடைவதற்கு உதவியதாக இலங்கை துறைமுக அதிகாரசபை நம்புகிறது.
கொழும்பு துறைமுகத்தை ஒரு கப்பல் போக்குவரத்து மையமாக நிறுவுவதற்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்த இந்த இலாபத்தைப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

