
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 846 பேர் கைது
‘முழு நாடும் ஒன்றாக’ நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 846 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்களில் 10 பேருக்கு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் புனர்வாழ்வு திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

