சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்

சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.

கட்டாரில் புதன்கிழமை (18) நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இரண்டு அணிகளும் சமநிலையில் காணப்பட்டதுடன், மேலதிக நேர முடிவிலும் அவ்வாறே காணப்பட்டிருந்தன.

இந்நிலையில் பரிஸ் ஸா ஜெர்மைனின் நுனோ மென்டிஸ் பெனால்டியை உட் செலுத்த 2-1 என்ற ரீதியில் பெனால்டியில் வென்று பரிஸ் ஸா ஜெர்மைன்  சம்பியனானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )