
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

