வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும்பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று(10) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )