
புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது
இங்கினியாகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (10) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது,
மேலும், புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல நாட்களாக இந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

