உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) காலை இலங்கை வந்துள்ளார். 

இலங்கையில் இடம்பெறும் 8வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாளை (13) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )