
இரத்தினபுரி மாவட்ட விளையாட்டு அரங்கின் ஓடுபாதை திறந்து வைப்பு
இரத்தினபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுபாதை நேற்று (12) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஓடுபாதையின் திறப்பு விழா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், விளையாட்டுத் துறைக்காக வட்டமேசையில் மாத்திரம் அமர்ந்து கலந்துரையாடாமல், திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை கட்டியெழுப்புவதற்கான புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

