
???? Breaking News : கணேமுல்ல சஞ்சீவ கொலை ; இஷாரா செவ்வந்தி கைது
புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ,சிறையில்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 19 அன்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்லா சஞ்சீவ என்ற சஞ்சீவா குமார சமரரத்ன ,புதுக்கடை எண் 05 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் முக்கிய சந்தேக நபர்தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நாளிலிருந்து அவர் தலைமறைகியமை குறிப்பிடத்தக்கது

