
குடும்பத் தகராறு காரணமாக மகனை கொலை செய்த தந்தை!
குருநாகல் – தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பட்டுவத்த – ஹெலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

