களுவாஞ்சிக்குடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (19 ) மாலை மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

உயிரிழந்த பெண்ணின் மகன் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பல முறை அழைத்தும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால் தாயை தேடி வீட்டிற்கு சென்றுள்ளார்

வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் உயிரிழந்து இருப்பதை அவதானித்த அவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )