இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்தியாவிற்கான பயனத்தின் போது, இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினேன்.

மரியாதை நிமிர்த்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, எமது சகோதர நாடான இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.” என பதிவிட்டுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )