
மெக்சிகோவில் கனமழை ; 64 பேர் பலி
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த கனமழையில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.
நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதம் அடைந்தன.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES World News

