
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று (16) ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
62 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அபிபுரா நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது.
நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
CATEGORIES World News

