
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி
பொலன்னறுவை வளேகட ஓனேகம வீதியில் நேற்று (15) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஓனேகம பகுதியில் இருந்து வளேகட பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களையும் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார் என்பது மேலும் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

