பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருள் மற்றும் பாதாள தொடர்புகள் உள்ளதா என விசாரணை

பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருள் மற்றும் பாதாள தொடர்புகள் உள்ளதா என விசாரணை

அனைத்து பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களா என்பது தொடர்பில் விசாரணை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பல மக்கள் பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

இதனடிப்படையில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )