நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாரஹேன்பிட்ட, டாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஐந்தாவது மாடியில் ,இன்று (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )