
கென்யாவில் விமான விபத்து ; 12 பேர் பலி
கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று (28) சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
CATEGORIES World News

