புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

பிரதமரின் தலைமையிலும், கல்வி அமைச்சின் செயலாளரின் பங்கேற்புடனும் கல்வி அமைச்சில் நடைபெற்ற பிரிவேனா கல்வி சபையின் 204வது கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்வி டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவதற்கு தேவையான இணைய வசதிகள் மற்றும் பிற ஏற்பாடுகளை தயாரிப்பது குஙித்தும், அதற்காக மனித வளங்களைப் பயிற்றுவிக்கும் முறைகள் குறித்தும் அமைச்சர் இதன்போது விரிவாக விவாதித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )