டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து  வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து  வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு

அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் “AI for Transforming Public Service” எனும் செயலமர்வு, கடந்த 27 ஆம் திகதி வட மாகாண பிரதம செயலகத்தில் நடைபெற்றது.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் மூலம் அரச சேவையை  நவீனமயப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு, பொது மக்கள் சேவைகளை செயற்திறனாக்குதல், புதிய வெளிநாட்டு பயிற்சிகளுக்கான வாய்ப்பு, டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் தயார்படுத்துதல், அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை விருத்தி செய்தல், நவீன உலகிற்கு ஏற்ற  அதிகாரியை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். 

image

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இங்கு முக்கிய உரை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதியில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

image
image

வட மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன்,வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வட மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் வட மாகாணத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )