
லசந்த விக்கிரமசேகர கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் காட்டில் கண்டுபிடிப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் புத்தளம்- கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு நேற்று பிற்பகல் அந்த வீதிப் பகுதியின் 16வது தூணுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இந்த மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தது.
கொலையைச் செய்த பின்னர் குறித்த மோட்டார் சைக்கிளில் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதாகவும், சந்தேக நபர்கள் கெக்கிராவவுக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மோட்டார் சைக்கிளை காட்டுப் பகுதியில் கைவிட்டு தப்பிச் சென்ற போது சந்தேக நபர்களை காட்டு யானை தாக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

