
ரிஷாட் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதினுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின்படி, இன்று (05) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த அரசாங்கக் காலத்தில் விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், அக்காலத்தில் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, அவர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

