
???? Breaking News : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (05) நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது
குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

