
ஹொரணையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

