முன்பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து புதிய நடவடிக்கைகள்

முன்பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து புதிய நடவடிக்கைகள்

சிறுவர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து எழுந்துள்ள கவலைகளைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பான சட்ட மற்றும் கொள்கை ரீதியான ஏற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகால சிறுவர் மேம்பாட்டுக்கான தேசிய செயலகத்துடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ,

நிர்வாகப் பொறுப்புகள்: மாகாண சபைகளின் கீழ் நிறுவப்பட்டுள்ள மாகாண முன்பள்ளி அலகுகள், முன்பள்ளிகள் உள்ளிட்ட ஆரம்பகால சிறுவர் மேம்பாட்டு நிலையங்களைப் பதிவு செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பாகும்.

பராமரிப்பு நிலையங்கள்,குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் மாகாண நன்னடத்தை திணைக்களங்களின் கீழ் பதிவு செய்யப்படுவதுடன், அவை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

இவ்வாறான நிலையங்களை இயக்குவதற்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில நிலையங்கள் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் இணைந்து முறையான பதிவு இன்றி இயங்குவதால், ஒழுங்குபடுத்தல் செயல்முறை சிக்கலடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்பள்ளிகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் தற்போதுள்ள மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தரநிலைகள் குறித்து உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தப்படும்.

இச்செயல்முறையை முறைப்படுத்துவதற்காக வினைத்திறன்மிக்க இணையவழிப் பதிவு முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )