மாத்தளை அங்கந்த தொங்கு பாலம் மக்கள் பாவனைக்காகத் திறப்பு

மாத்தளை அங்கந்த தொங்கு பாலம் மக்கள் பாவனைக்காகத் திறப்பு

கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் மாத்தளையின் சுது கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அங்கந்த தொங்கு பாலம், அண்மையில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த அங்கந்த பாலம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பிரதேச மக்களின் கோரிக்கையின் பேரில், ரூபாய் 78 இலட்சம் செலவில் மூன்று மாதங்களுக்குள் குறுகிய காலத்தினுள் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம், அங்கந்த, திகல, ஹுனுகெட்டெல்ல மற்றும் ரன்முத்துகம ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 300 குடும்பங்கள் பயனடைகின்றனர்

இந்நிகழ்வில் மாத்தளை பிரதேச சபையின் தலைவர் சமீர ஜயரத்ன, மாத்தளை மாவட்டச் செயலாளர் பிரசன்ன மதனாயக்க ஆகியோருடன் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )