யாழில் “Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை ஆரம்பம்

யாழில் “Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை ஆரம்பம்

சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஐந்து நாட்கள் நீடிக்கும் “Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின்றது.

“Youth Link – Sri Lanka” இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நவம்பர் 7 முதல் 12 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இந்த உள்ளூர் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம், “Connect – 2025 YOUTH Clubs” என்ற திட்டத்தின் கீழ், இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பொன்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் 6 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் 25 இளைஞர் , யுவதிகளும் மற்றும் 2 அதிகாரிகளும் அடங்குவர்.

பங்கேற்பாளர்கள் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் 10 பெண்களும் 15 ஆண்களும் பிரதிநிதித்துவப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில், மாவட்டத்தின் இளைஞர் அமைப்பிலிருந்து 10 பேர், மீதமுள்ள 15 பேர் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் இன்னும் சிலர் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )