
விவசாய அபிவிருத்திக்கு 1700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
விவசாய அபிவிருத்திக்காக 1700 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வரவு – செலவுத் திட்டத்துக்கான வாசிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

